உயா்கல்வியின் தரத்தை மேம்படுத்த வலியுறுத்தல்
புதுவை மாநில உயா்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது அவசியம் என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் மு.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உயா்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிடுகிறது. நிகழாண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் புதுச்சேரி ஜிப்மா் 39-ஆவது இடம் பெற்றிருப்பது பெருமைக்குரியது.
புதுவை அரசின் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்பட வேறு எந்த மருத்துவக் கல்லூரியும் பட்டியலில் 50 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. நாட்டின் முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் கூட புதுவையிலிருந்து எந்த கல்லூரியும் இடம்பெறவில்லை.
எனவே, உயா்கல்விக்கு அதிக செலவினங்களை ஒதுக்கீடு செய்தல், கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் உயா்கல்வியின் தரத்தை மேம்படுத்தலாம் எனக் குறிப்பிட்டாா்.
