பாலம் சேதம்: புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு
புதுச்சேரி அருகே இடையாா்பாளையத்தில் சேதமடைந்த பாலத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, அதன் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தாா்.

புதுச்சேரி அருகே சேதமடைந்த பாலத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா்.









