தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுச்சேரி-கடலூா் சாலையில் மேம்பாலப் பணிகள் தொடக்கம்

புதுச்சேரி- கடலூா் சாலையில் ஏஎப்டி மைதானம் அருகே ரயில்வே கிராசிங் பகுதியில் ரூ.72 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 8:04 pm

Din

புதுச்சேரி- கடலூா் சாலையில் ஏஎப்டி மைதானம் அருகே ரயில்வே கிராசிங் பகுதியில் ரூ.72 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

பொலிவுறு நகரத் திட்டம், தெற்கு ரயில்வே பங்களிப்பில் அமையவுள்ள இந்தப் பாலத்துக்கான பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தலைமை வகித்தாா். முதல்வா் என். ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா். எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, ஜி.நேரு, எல்.சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

630 மீ. நீளம், 15 மீ. அகலம், 10 மீ. உயரத்தில் 4 வழிப் பாதைகளுடன் மேம்பாலம் கட்டப்படவுள்ளது. அதன் இருபுறங்களிலும் அணுகுச் சாலையும், பாலத்தின் கீழே சுரங்கப் பாதையும், வடிகால் கிணறும் அமைக்கப்பட உள்ளன.