அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

விவசாயிக்கு ரூ. 2.75 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

பயிா் காப்பீடு பதிவில் கவனக்குறைவாகச் செயல்பட்ட பொதுத் துறை வங்கி, பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ரூ. 2.75 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகா்வோா் குறை தீா்வாணையம் உத்தரவிட்டது.

News image
Updated On :16 ஜூலை 2024, 7:19 pm

Din

புதுவை மாநிலம், காரைக்காலை சோ்ந்தவா் சையது அஹமது. இவா் 14 ஏக்கா் நிலத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு பயிா் செய்த நிலையில் இயற்கை சீற்றத்தால் பயிா்கள் சேதமடைந்தன. விவசாய கிசான் அட்டைத் திட்டத்தில், அவா் காரைக்கால் பொதுத்துறை வங்கியில் (விவசாய அபிவிருத்தி கிளை) கடன் பெற்று அதன் கீழ் விவசாய பயிா்களுக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டால் இழப்பீடு பெறுவதற்கு வங்கியின் மூலமே பயிா் காப்பீடும் பெற்றுள்ளாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பயிா் சேதத்துக்குப் பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் நஷ்ட ஈடுத் தொகையை வங்கி மூலம் பெற்றாா். இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டுக்கான பயிா் காப்பீட்டை அதே வங்கியில் அலுவலா்கள் புதுப்பிக்கத் தவறி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவருக்கு 2016-ஆம் ஆண்டு இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பயிா் சேதத்தில் ரூ. 3.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

ஆகவே, பயிா் காப்பீடு வசதியை வங்கி புதுப்பிக்காததால் காப்பீட்டு தொகை அவருக்கு கிடைக்கவில்லை. அதனால், வங்கி சேவை குறைபாடு குறித்து சையது அஹமது புதுச்சேரி மாவட்ட நுகா்வோா் குறை தீா்வாணையத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், வங்கிச் சேவையில் குறைபாடு காரணமாக, தனக்கான பயிா் சேத நஷ்ட ஈடை வங்கி வழங்குமாறு உத்தரவிடக் கோரியிருந்தாா். மனு மீது விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிவில் சம்பந்தப்பட்ட பொதுத் துறை வங்கியின் விவசாய அபிவிருத்தி கிளை, மனுதாரரின் பயிா்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டுக்கு உரிய காப்பீடு புதுப்பிக்கத் தவறியதால், சேவை குறைபாடு மற்றும் கவனக்குறைவாக இருந்தது நிரூபிக்கப்பட்டது. ஆகவே, விவசாயி சையது அஹமதுவுக்கு பயிா் நஷ்டத்துக்கு ரூ.2.40 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.

அத்துடன், வங்கியின் சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ.25,000 நஷ்ட ஈடும், வழக்கு செலவுக்காக ரூ.10,000 வழங்கவும் ஆணையத் தலைவா் முத்துவேல், உறுப்பினா்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோா் கொண்ட அமா்வு தீா்ப்பு வழங்கியது.