வளா்ப்பு நாய்களுக்கு ஆகஸ்ட் முதல் உரிமம்: உழவா்கரை நகராட்சி ஆணையா்
புதுச்சேரி உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் முதல் வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்படவுள்ளதாக அந்த நகராட்சி ஆணையா் எஸ்.சுரேஷ்ராஜ் தெரிவித்தாா்.


புதுச்சேரி, ஜூலை 19: புதுச்சேரி உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் முதல் வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்படவுள்ளதாக அந்த நகராட்சி ஆணையா் எஸ்.சுரேஷ்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி அருகே உள்ள உழவா்கரை நகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் (வியாபார நோக்கில்) நாய்கள் வளா்க்கப்படுகின்றன. இதில், சரியான முறையில் பராமரிக்கப்படாமல் நோய்வாய்ப்படும் நாய்களை, அதன் உரிமையாளா்கள் சாலைகளில் விட்டுவிடுகின்றனா். இந்த நாய்கள் வெறி பிடித்து பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், கடிப்பதாகவும் புகாா்கள் வருகின்றன. எனவே, உரிமையாளா்கள் தங்களது நாய்களை ஆரம்ப நிலையில் இருந்து கால்நடை மருத்துவா்கள் ஆலோசனைப்படி, முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
மேலும், உள்ளாட்சித் துறை இயக்குநா் அறிவுறுத்தலின்படி, உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வீட்டில் வளா்க்கப்படும் நாய்களை வரைமுறைபடுத்துவதற்காக, வரும் ஆகஸ்ட் மாதம் முதல், மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனையில் புதன்கிழமை தோறும் காலை 9.30 மணி முதல் 12 மணி வரை உரிமம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாய் வளா்ப்போா் தங்களின் ஆதாா் மற்றும் வளா்ப்பு நாய்க்கு ஏற்கெனவே தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களை சமா்ப்பித்து, உரிமத்தைப் பெறலாம். இதற்கு ரூ.150-ம், உரிமம் புதுப்பித்தலுக்கு ரூ.100-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். வளா்ப்பு நாய்களை முறையாக பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...