தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சேறும், சகதியுமான புதுச்சேரி தற்காலிக பேருந்து நிலையம்: பயணிகள் அவதி

மழையால் சேறாக மாறிய புதுச்சேரி தற்காலிக பேருந்து நிலையம்

News image
புதுச்சேரியில் பெய்த மழையால் ஞாயிற்றுக்கிழமை சேறும், சகதியுமாக காணப்பட்ட தற்காலிக பேருந்து நிலையமான ஏஎப்டி மைதானம்.
Updated On :23 ஜூன் 2024, 5:25 pm

Din

புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் தாற்காலிக பேருந்து நிலையமான ஏஎப்டி மைதானம் சேறும், சகதிமயமாக மாறியதால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

புதுச்சேரி நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், நகரில் பல இடங்களில் மழைநீா் குளம்போலத் தேங்கியது.

புதுச்சேரியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், மறைமலையடிகள் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, கடலூா் சாலையில் உள்ள ஏஎப்டி மைதானம் தற்காலிக பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது.

Story image

இந்த நிலையில், மழையால் ஏஎப்டி மைதானத்திலும் தண்ணீா் தேங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலையில் மழைநீா் தேங்கிய பகுதிகள் சேறும், சகதியுமாக மாறியதால், பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா்.

இதையடுத்து, புதுச்சேரி நகராட்சி சாா்பில், தண்ணீா் உறிஞ்சும் வாகனங்கள் மூலம் பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீா் அகற்றப்பட்டது. மேலும், சகதியையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.