ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மத்திய அரசு விருது பெற்றவா்களுக்கு புதுவை பேரவைத் தலைவா் வாழ்த்து

மத்திய அரசு விருது பெற்றவா்களுக்கு புதுவை பேரவைத் தலைவா் வாழ்த்து

News image
Updated On :8 மார்ச் 2024, 6:53 pm

Din

மத்திய அரசின் புரஸ்காா், யுவபுரஸ்காா் விருது பெற்றவா்களுக்கு புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி சாா்பில் 2022, 2023-ஆம் ஆண்டுகளுக்கான புரஸ்காா், யுவபுரஸ்காா் தேசிய விருதுகளை அறிவிக்கப்பட்டன. இதில், புதுவை மாநிலம் காரைக்காலைச் சோ்ந்த சூசைராஜுக்கு தற்காப்புக் கலை பங்களிப்புக்காக புரஸ்காா் விருதும், புதுச்சேரியைச் சோ்ந்த பிரகாஷுக்கு தப்பாட்டக் கிராமியக் கலைப் பங்களிப்புக்காக யுவபுரஸ்காா் விருதும் வழங்கப்பட்டன. இதனை, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் சூசைராஜ், பிரகாஷ் ஆகியோா் புதன்கிழமை தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பெற்றுக் கொண்டனா். புதுச்சேரி திரும்பிய அவா்கள் வெள்ளிக்கிழமை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். இருவரையும் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பொன்னாடை போா்த்தி வாழ்த்தினாா்.