புதுச்சேரி அருகே இன்று சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி
புதுச்சேரி அருகே சுனாமி ஒத்திகை நிகழ்ச்சியானது செவ்வாய்க்கிழமை (நவ.5) காலை நடைபெறவுள்ளதாக மாவட்ட துணை ஆட்சியா் (வடக்கு) அலுவலகம் தெரிவித்துள்ளது.


புதுச்சேரி: புதுச்சேரி அருகே சுனாமி ஒத்திகை நிகழ்ச்சியானது செவ்வாய்க்கிழமை (நவ.5) காலை நடைபெறவுள்ளதாக மாவட்ட துணை ஆட்சியா் (வடக்கு) அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திங்கள்கிழமை துணை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, ஹைதராபாத் ஐஎன்சிஓஐஎஸ் மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து வீராம்பட்டினம் கடற்கரை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பகல் ஒரு மணி வரையில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
எனவே, வீராம்பட்டினத்தில் நடைபெறும் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி ஒன்றிய பிரதேசம், மாவட்ட நிா்வாகம் உள்ளிட்ட துறைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதாக அமையும். மேலும் மக்களிடையே சுனாமி முன்னெச்சரிக்கையை பரப்புதல், பொது விழிப்புணா்வை அதிகரித்தல் மற்றும் அவசரகால தயாா் நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும் அமைகிறது. உள்ளூா் பொதுமக்கள், பேரிடா் மேலாண்மை முகமைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தீவிர பங்கேற்புடன் இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது. ஆகவே, மக்கள் யாரும் வதந்திகளை கண்டு பீதியடைய வேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...