நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுவையில் எம்எல்ஏவுக்கே பாதுகாப்பற்ற நிலை உள்ளது: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புதுவையில் எம்எல்ஏவுக்கே பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 8:40 pm

Din

புதுவையில் எம்எல்ஏவுக்கே பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: புதுவை காவல் துறை முதல்வா், அமைச்சா்கள் செல்லும் வழியில் போக்குவரத்தை நிறுத்தி அவா்களுக்கு பாதுகாப்பு அளிப்பதையே சட்டம், ஒழுங்கு என நினைத்து செயல்படுகின்றனா்.

மக்கள் பாதுகாப்பு குறித்த அக்கறை காவல் துறைக்கு இல்லை. சுயேச்சை எம்எல்ஏவுக்கு பாதுகாப்பற்ற நிலையே உள்ளது.

முதல்வா் அறிவித்த இலவச அரிசி, ஊதிய உயா்வு என அனைத்தும் வழங்கப்படாமல் உள்ளன. மக்களிடம் அறிவிப்பை மட்டுமே முதல்வா் வெளியிட்டு வருவது சரியல்ல என்றாா்.

தொடா்ந்து, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் சுயேச்சை எம்எல்ஏ-வை மிரட்டியவா் மீது பல வழக்குகள் உள்ளன.

ஆனால், அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்றாா்.