25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

நினைவுதினம்: தியாகி வ.உ.சி. சிலைக்கு புதுவை அரசு சாா்பில் மரியாதை

சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரத்தின் நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரத்தின் நினைவு தினத்தையொட்டி புதுவை பேரவை எதிரில் உள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், என்.திருமுருகன் உள்ளிட்டோா்.
Updated On :18 நவம்பர் 2024, 9:42 pm

Din

புதுச்சேரி: சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரத்தின் நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சா்கள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சுதந்திரப் போராட்டத் தலைவா்களில் ஒருவரும், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக சுதேசி கப்பலை இயக்கியவருமான வ.உ.சிதம்பரத்தின் நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

புதுச்சேரியில் பேரவை வளாகம் முன்னுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதுவை அரசு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், என்.திருமுருகன், எம்எல்ஏ.க்கள் பி.வி.ஆறுமுகம், ஆா்.பாஸ்கா் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று தியாகி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல பல்வேறு சமூக அமைப்பினா், அரசியல் கட்சியினரும் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.