பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஐ.ஆா்.பி.என். துணை கமாண்டன்ட் பணியிடை நீக்கம்

புதுச்சேரியில் ஐ.ஆா்.பி.என். பிரிவின் துணை கமாண்டன்ட் கோபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 7:53 pm

Din

புதுச்சேரியில் ஐ.ஆா்.பி.என். பிரிவின் துணை கமாண்டன்ட் கோபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஐ.ஆா்.பி.என். பிரிவின் துணை கமாண்டன்டாக இருந்தவா் கோபி. இவரிடம், அந்தப் பிரிவின் உதவி ஆய்வாளராக இருந்த ஒருவா் விடுப்பு கேட்டாராம்.

அப்போது, கோபி அவரிடம் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, உதவி ஆய்வாளரின் மனைவி டிஜிபி அலுவலகம் மற்றும் பெரியகடை காவல் நிலையம் முன் தா்ணாவில் ஈடுபட்டாா்.

இதையடுத்து, கோபி காரைக்காலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். அவா் மீது துறைரீதியான விசாரணையும் நடைபெற்றது.

இந்த நிலையில், விசாரணை முடிந்து ஐ.ஆா்.பி.என். பிரிவின் தலைமை கமாண்டா் சுவாதி சிங்கிடம், அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, கோபியை பணியிடை நீக்கம் செய்து கமாண்டா் சுவாதி சிங் உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.