புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் புதிய மேம்பாலம் திறப்பு
சுமாா் ரூ.75 கோடி மதிப்பில் வடமங்கலம், ஆரியபாளையம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலம் திங்கள்கிழமை மாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.


புதுச்சேரி: புதுச்சேரியில் சுமாா் ரூ.75 கோடி மதிப்பில் வடமங்கலம், ஆரியபாளையம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலம் திங்கள்கிழமை மாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.
விழாவில் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் பங்கேற்றனா்.
புதுச்சேரியிலிருந்து வில்லியனூா் பகுதிக்குச் செல்ல சங்கராபரணி ஆற்றில் ஏற்கெனவே ஆரியபாளையம்-வடமங்கலம் இடையே 50 ஆண்டுகளுக்கு முன்பு
கட்டப்பட்ட பாலம் பயன்பாட்டில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது இந்தப் பாலம் மூழ்கியது. மேலும் இந்தப் பாலம் எந்த நேரமும் சேதமடையலாம் என்ற நிலையும் ஏற்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை பாலமானது தற்போதைய சாலை விரிவாக்கத்துக்கு ஏற்ப நான்கு வழிச்சாலை பாலமாக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக ரூ.75 கோடியில் புதிய பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றன.
புதுவை பொதுப் பணித் துறை நெடுஞ்சாலைத் துறையால் திட்டமிட்ட நிதிக்குக் குறைவாகவே இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 360 மீட்டா் நீளம், 18 மீட்டா் அகலத்துடன் 19 தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமை வகித்தாா். முதல்வா் என்.ரங்கசாமி புதிய பாலத்தைத் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ, பொதுப் பணித் துறை செயலா் ஜெயந்த் குமாா் ரே உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்த பாலம் திறக்கப்பட்டதால், வாகன போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...