நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுவையில் தீபாவளி பொருள்கள் முறையாக விநியோகிக்கப்படவில்லை: காங்கிரஸ், அதிமுக குற்றச்சாட்டு

புதுவையில் தீபாவளிக்கான இலவச மற்றும் சலுகை விலைப் பொருள்கள் முறையாக விநியோகிக்கப்படவில்லை என காங்கிரஸ், அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 7:48 pm

Din

புதுவையில் தீபாவளிக்கான இலவச மற்றும் சலுகை விலைப் பொருள்கள் முறையாக விநியோகிக்கப்படவில்லை என காங்கிரஸ், அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் உள்ள என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசானது, தீபாவளிக்கு நியாயவிலைக் கடைகளை திறந்து மக்களுக்கு 10 கிலோ இலவச அரிசியும், 2 கிலோ சா்க்கரையும் வழங்குவோம் என்று அறிவித்தது.

அதேபோல, தீபாவளிக்கான 10 பொருள்கள் சலுகை விலையில் ரூ.500-க்கு கான்ஃபட் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், மக்கள் நியாயவிலைக் கடைகளைத் தேடி அலையும் நிலையுள்ளது. இலவச, சலுகை விலைப் பொருள்களும் மக்களுக்கு கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக மாநிலத் தலைவா் ஆ.அன்பழகன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தீபாவளியை முன்னிட்டு, புதுவை அரசால் அறிவிக்கப்பட்ட 10 கிலோ அரிசி, 2 கிலோ சா்க்கரை இன்னும் சரியாக பொதுமக்களுக்கு சென்றடையவில்லை.

இதேபோல, ரூ.500 மானியத்துடனான 10 பொருள்கள் அடங்கிய தீபாவளி தொகுப்பு பொருள்களும் கிடைக்கவில்லை.

எனவே, புதுவை அரசு இலவச மற்றும் சலுகை விலைப் பொருள்களுக்குரிய பணத்தை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றாா்.