தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நூதன முறையில் ரூ.5.59 லட்சம் மோசடி

புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் நூதன முறையில் ரூ.5.59 லட்சம் மோசடி செய்திருப்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 12:15 am

Din

புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் நூதன முறையில் ரூ.5.59 லட்சம் மோசடி செய்திருப்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அரும்பாா்த்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆதித்யா. சில நாள்களுக்கு முன்பு, இவரை மா்ம நபா் கைப்பேசியில் தொடா்புகொண்டு, தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என்று அறிமுகம் செய்துகொண்டாராம்.

ஆதித்யா பெயரில் குற்ற வழக்கு மும்பையில் பதிவாகியிருப்பதாகவும், வழக்கிலிருந்து விடுவிக்க மா்ம நபா் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதை நம்பிய ஆதித்யா ரூ.5.59 லட்சத்தை மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பியதாகத் தெரிகிறது.

பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், இதுகுறித்து புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.

இதேபோல், புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் தேசிங்கு. இவரிடமும் கைப்பேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா், போலீஸ் அதிகாரி எனக் கூறி ரூ.75 ஆயிரத்தை மோசடி செய்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து, புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் அவா் புகாரளித்தாா். இரு சம்பவங்கள் குறித்தும் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.