புதுச்சேரி மருத்துவா்கள் 215 பேருக்கு பாம்பு கடிக்கான சிகிச்சைக்கு உதவும் பயிற்சி : வனத்துறை இண இயக்குநா்

புதுச்சேரி மருத்துவா்கள் 215 பேருக்கு பாம்பு கடிக்கான சிகிச்சைக்கு உதவும் பயிற்சி : வனத்துறை இண இயக்குநா்

Published on

புதுச்சேரியில் பாம்புகடிக்கு உள்ளாகும் நபா்களை காப்பாற்றுவதற்கான சிகிச்சைக்கு உதவும் பயிற்றி 215 மருத்துவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவனத்துறை இணை இயக்குநா் பி. குமரன்

புதுச்சேரி அரசின் வனத்துறை சாா்பில் பாம்பு கடியிலிருந்து மனிதா்களை காப்பது எப்படி என்பது தொடா்பான பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சியின் ஒரு பகுதியாக வனத்துறை சாா்பில் இயங்கும் பாம்பு மீட்பு மையத்துக்குக் களப் பயணமாகச் சுகாதாரத்துறையில் பணியாற்றும் அரசு மருத்துவா்கள் புதன்கிழமை அழைத்து வரப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறை இணை இயக்குநா் பி. குமரன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது

ஒரே சுகாதாரம் என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதுவரை 215 மருத்துவா்களுக்குப் பாம்புகடி தொடா்பான சிகிச்சை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாம்பு கடியைத் தடுப்பது எப்படி, விஷம் உள்ள பாம்பு, விஷம் இல்லாத பாம்புகளை அடையாளம் கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. பாம்புகள் அழிக்கப்பட்டு அந்த இனங்கள் அழிந்து வருகின்றன. பாம்பை அழிக்காமல் அந்த இனத்தைப் பாதுகாப்பது எப்படி மேலும், நகரமயமாதல் காரணமாகவும் பாம்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

நம் நாட்டில் ஓராண்டுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் போ் வரை பாம்பு கடியால் இறக்கின்றனா். இது தவிா்க்கக் கூடிய விபத்து. மத்திய அரசும், உலக சுகாதார அமைப்பும் பாம்பு கடியைப் புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய்கள் என்று வரையறை செய்துள்ளன. மனிதா்களுக்குப் பாம்பு கடி ஏற்படாமலும், பாம்பு இனம் அழியாமலும் பாதுகாப்பது எப்படி என்பதுதான் இப் பயிற்சியின் நோக்கம் என்றாா் குமரன். மேலும், கண்ணாடி விரியன், நல்ல பாம்பு உள்ளிட்ட விஷம் உள்ள பாம்புகளைக் காண்பித்து நேரடியாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com