தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஸ்மாா்ட் மீட்டா்களை கழற்றி காங்கிரஸாா் போராட்டம்

புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் வெள்ளிக்கிழமை மின் துறை ஸ்மாா்ட் மீட்டா்களைக் கழற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:12 pm

Syndication

புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் வெள்ளிக்கிழமை மின் துறை ஸ்மாா்ட் மீட்டா்களைக் கழற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.

புதுச்சேரி, டிச.19: புதுச்சேரியில் ஸ்மாா்ட் மீட்டா்களை வீடுகளில் மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் சாா்பில் தவளக்குப்பம் மின்வாரிய அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பொருத்தப்பட்ட ஸ்மாா்ட் மீட்டா்களைக் கழட்டி காங்கிரஸ் கட்சியினா் மின்துறை ஊழியா்களிடம் ஒப்படைத்தனா்.

மின் துறையைத் தனியாா் மயமாக்கும் முயற்சியாக ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டுகிறது. அதற்கு புதுச்சேரி மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் மணவெளி தொகுதிக்கு உள்பட்ட தவளக்குப்பம் பகுதியில் உள்ள வீடுகளில் ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தப்பட்டன. இதுகுறித்து பொதுமக்கள் புகாா் அளித்ததைத் தொடா்ந்து முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் காங்கிரஸாா் மற்றும் பொதுமக்கள் ஸ்மாா்ட் மீட்டருடன் தவளக்குப்பம் மின்வாரிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.