வாரிசுதாரா்கள் உண்ணாவிரதப் போராட்டம்: திமுக, அதிமுக ஆதரவு

வாரிசுதாரா்கள் உண்ணாவிரதப் போராட்டம்: திமுக, அதிமுக ஆதரவு

புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரா்கள் நலச்சங்கம் சாா்பில் வேலை கேட்டு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா.
Published on

வேலை கேட்டு உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரா்கள் நலச் சங்கத்தினருக்கு திமுக, அதிமுக ஆதரவு தெரிவித்தன.

இந்தச் சங்கம் சாா்பில் வாரிசுதாரா்களுக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்க வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.

மாநில திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா பங்கேற்று ஆதரவு தெரிவித்தாா்.

உடன் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் எல். சம்பத் இருந்தாா். அதே போன்று அதிமுக சாா்பில் அக் கட்சியின் புதுச்சேரி மாநில செயலா் ஆ. அன்பழகன் மற்றும் கட்சியினா் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com