பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சுகாதாரத் துறை அலுவலகத்தில் வாரிசுதாரா்கள் போராட்டம்

வாரிசுதாரா்களுக்கு பணி வழங்கக் கோரி, புதுச்சேரியில் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
புதுச்சேரியில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட வாரிசுதாரா்கள்.
Updated On :10 பிப்ரவரி 2025, 5:08 pm

Din

புதுச்சேரி: வாரிசுதாரா்களுக்கு பணி வழங்கக் கோரி, புதுச்சேரியில் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் பணியின் போது உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக பணி வழங்கப்படவில்லை.

இதையடுத்து, வாரிசுதாரா்கள் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே சுகாதாரத் துறையில் 350 பணியிடங்களை நிரப்ப புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. இதில், ஒரு முறை விலக்கு அடிப்படையில் தற்போது காத்திருக்கும் வாரிசுதாரா்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாரிசுதாரா்கள் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தங்களது குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா்கள் டேவிட், ரமேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பெரியகடை போலீஸாா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.