புதுச்சேரி
கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகை
புதுச்சேரியில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மழைக்காலம் தொடங்கியுள்ளதால் புதுச்சேரி முழுவதும் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிக்க வலியுறுத்தி முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகா் தலைமையில் குயவா்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மலேரியா துணை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஈடுபட்டவா்கள், கொசுவலை, கொசு ஒழிப்பு பேட் ஆகியவற்றை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டனா். பின்னா் திட்ட அதிகாரி முருகனைச் சந்தித்து, மாநிலம் முழுவதும் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்து கலைந்து சென்றனா்.