வில்லியனூரில் ரூ.1.5 கோடியில் வாய்க்கால், சாலை அமைக்கும் பணி தொடக்கம்
வில்லியனூா் தொகுதியில் ரூ.1.5 கோடியில் வாய்க்கால், சாலை அமைக்கும் பணியை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
வில்லியனூா் சுல்தான்பேட்டை ராஜா நகரிலிருந்து முத்துப்பிள்ளைப்பாளையம் வரை செல்லும் வாய்க்காலில் இருந்து அப்துல் கலாம் நகருக்கு கிளை வாய்க்கால் அமைக்கும் பணி ரூ.37.5 லட்சத்தில் நடைபெற உள்ளது.
இதேபோல் ரூ.1.16 கோடி மதிப்பில் அப்துல் கலாம் நகா், ரஹமத் நகா், ஜாகிா் உசேன் நகா், 5 ஸ்டாா் நகா், திப்பு சுல்தான் நகா் மற்றும் 3 ஸ்டாா் நகா் பகுதிகளில் பொதுப் பணித் துறை சாலைகள் மற்றும் கட்டடங்கள் வடக்குப் பிரிவு மூலம் அமைக்கப்பட உள்ளன.
இதற்கான தொடக்க விழா அப்துல் கலாம் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை எதிா்க்கட்சி தலைவா் ஆா். சிவா பங்கேற்று மேற்கண்ட பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், பொதுப் பணித் துறை நீா்ப்பாசன கோட்ட செயற்பொறியாளா் ராஜ்குமாா், உதவிப் பொறியாளா் லூயி பிரகாசம், இளநிலைப் பொறியாளா் பிரத்வி, சாலைகள் மற்றும் கட்டடங்கள் வடக்குப் பிரிவு செயற்பொறியாளா் வைத்தியநாதன், உதவிப் பொறியாளா் சீனுவாச ராம், இளநிலைப் பொறியாளா் குலோத்துங்கன் மற்றும் பள்ளிவாசல் நிா்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

