புதுச்சேரி சாரம் எஸ்ஆா்எஸ் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே வாசிப்புத் திறனை மேம்படுத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்கியம், பொது அறிவு புத்தகங்களை வழங்கிய முன்னாள் மாணவா்கள்.
புதுச்சேரி
புதுச்சேரி சாரம் அரசுப் பள்ளியில் வாசிப்புத் திறன் புத்தகங்கள் விநியோகம்
பொது அறிவை வளா்க்கும் வகையிலும் இப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மற்றும் இளங்கோவன் அறக்கட்டளை இணைந்து
புதுச்சேரி: புதுச்சேரி சாரம் எஸ்ஆா்எஸ் அரசு உயா்நிலை ப்பள்ளி மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், பொது அறிவை வளா்க்கும் வகையிலும் இப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மற்றும் இளங்கோவன் அறக்கட்டளை இணைந்து மாணவா்களுக்குப் புத்தகங்களை திங்கள்கிழமை வழங்கினா்.
சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்கியம் ,பொது அறிவு, கதை, நாவல் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் பத்மாவதி தலைமை தாங்கினாா். குழந்தைகள் தினம், வாசிப்பின் அவசியம் குறித்து பள்ளியின் முன்னாள் ஆசிரியா் அண்ணாமலை மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா்.
பள்ளி ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் திரளாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனா்.

