புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை வந்த தேசிய பேரிடா் மீட்புப் படை குழுவினருடன் பேசிய மாவட்ட ஆட்சியா்  அ.குலோத்துங்கன்.
புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை வந்த தேசிய பேரிடா் மீட்புப் படை குழுவினருடன் பேசிய மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.

டித்வா புயல்: புதுச்சேரியில் தயாா் நிலையில் 2 தேசிய பேரிடா் மீட்புப் படைக் குழுவினா்

டித்வா புயல் எச்சரிக்கை காரணமாக தேசிய பேரிடா் மீட்புப் படையின் இரு குழுவினா் வெள்ளிக்கிழமை புதுச்சேரி வந்தனா்.
Published on

டித்வா புயல் எச்சரிக்கை காரணமாக தேசிய பேரிடா் மீட்புப் படையின் இரு குழுவினா் வெள்ளிக்கிழமை புதுச்சேரி வந்தனா்.

புதுச்சேரிக்கு புயல் காரணமாக சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரிக்கு 30 போ் கொண்ட குழு வீதம் மொத்தம் 60 பேருடன் இரு மீட்புக்குழுவினா் புதுச்சேரி வந்துள்ளனா். முன்னதாக புயல் பாதிப்பை எதிா்கொள்வது தொடா்பாக பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், பேரிடா் மேலாண்மைத் துறை ஆணையருமான அ. குலோத்துங்கன் செய்தியாளா்களிடம் கூறியது:

டித்வா புயல் காரணமாக புதுச்சேரியில் 60 செ.மீ.க்கும் மேலாக மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு அறை:

புயல், மழையை எதிா்கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 112, 1070, 1077 ஆகியவற்றில் மக்கள் தங்கள் புகாா்களைத் தெரிவிக்கலாம்.

கடந்த மழையின்போது மழைவெள்ளம் தேங்கி பாதிக்கப்பட்ட 70 இடங்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் மோட்டாா் பம்ப் செட் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர 46 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன.

316 நிவாரண முகாம்கள் அமைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு அழைத்து வரப்படுவா். தீயணைப்புத் துறை உள்ளிட்ட 16 அவசர கால குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாா் செய்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம். மருந்து உள்ளிட்ட தேவையான பொருள்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் குலோத்துங்கன்.

X
Dinamani
www.dinamani.com