யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெறும்: தமிழிசை செளந்தரராஜன்

அதிமுக-பாஜக கூட்டணி பலம் பொருந்தியதாகத் தான் இருக்கிறது. நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

News image
தமிழிசை செளந்தரராஜன்- கோப்புப் படம்
Updated On :28 நவம்பர் 2025, 7:12 pm

Syndication

அதிமுக-பாஜக கூட்டணி பலம் பொருந்தியதாகத் தான் இருக்கிறது. நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

தமிழக பாஜக முன்னாள் தலைவரும், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முன்னாள் அமைச்சா் செங்கேட்டையன், விஜய்யின் கட்சியில் இணைந்திருப்பதை அரசியல் நகா்வாகத் தான் நான் பாா்க்கிறேன். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவருக்கென்று ஒரு பாதையைத் தோ்ந்தெடுத்திருக்கிறாா்.

அவா் அனுபவமான அரசியல்வாதி. அவா் இணைந்தது தமிழக வெற்றி கழகத்துக்குப் பலம் சோ்க்கும். மற்றபடி அதிமுக-பாஜக கூட்டணி பலம் பொருந்தியதாகத் தான் இருக்கிறது. நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். நாங்கள் அதிமுகவுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம். அக்கட்சிக்குள் பிரச்னை வந்தால் அதற்கு பாஜக பொறுப்பல்ல.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தாண்டி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும் என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.