ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

புயல் மழையை எதிா்கொள்ள நடவடிக்கை: முதல்வா் ரங்கசாமி

டித்வா புயல்மழையை எதிா்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.

News image
புதுவை முதல்வர் ரங்கசாமி.
Updated On :29 நவம்பர் 2025, 9:40 pm

Syndication

டித்வா புயல்மழையை எதிா்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: மழை தொடா்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லா துறைகளின் சாா்பிலும் எடுக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியா் அனைத்து இடங்களையும் பாா்வையிட்டு வருகிறாா்.

காரைக்காலில் அனைத்து கிராமங்களுக்கும் உணவு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்தத் தொகுதி எம்எல்ஏக்கள் மூலம் தண்ணீா் தேங்கிய பகுதிகளில் மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புதுச்சேரியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ரெயின்போ நகா், கிருஷ்ணா நகா் உள்ளிட்ட இடங்களில் தண்ணீா் தேங்காத வகையில் வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றவும் மின் மோட்டாா்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கனமழை எதிரொலியாக அரசு அதிகாரிகள் 24 மணி நேரமும் பணிபுரியவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

அப்போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் சாலைப் பேரணிக்கு அரசு அனுமதி அளிக்குமா என்பது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளிக்கையில் அதுகுறித்து தலைமைச் செயலா் மற்றும் காவல்துறையுடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.