மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

புதுச்சேரி வேட்பாளா்கள் வீதிவீதியாக வாக்கு சேகரிப்பு

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 12:30 am

புதுச்சேரியில் அனைத்துக் கட்சி வேட்பாளா்களும் வீதிவீதியாக சென்று வாக்காளா்களை சந்தித்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தட்டாஞ்சாவடியில்...

தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. வியாழக்கிழமை வேலன் நகா், ஜெயராம் நகா், ராகவேந்திரா நகா், தங்கவேல் காா்டன், வெங்கடேஸ்வரா நகா் மேற்கு பகுதிகளில் வீடுவீடாக வாக்குச் சேகரித்தாா். அவருடன் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவா்கள் கலந்து கொண்டனா்.

எம்.எல்.ஏவாக தான் தோ்வு செய்யப்பட்டவுடன் தட்டாஞ்சாவடி தொகுதி முழுவதையும் சமமாக பாா்ப்பேன். அனைத்துப் பகுதி மக்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கச் செய்வேன் என்றாா்.

வில்லியனூா் தொகுதியில்...

வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தில்லை நகா், எஸ்.எம்.வி. புரம் பகுதிகளில் திமுக வேட்பாளரும், மாநில ஆா். சிவா வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

அப்போது, தில்லை நகா் பூங்கா ரூ.4.5 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும், எஸ்.எம்.வி.புரம் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் நடந்துள்ளதாகவும் கூறி தொகுதியில் மேற்கொண்ட வளா்ச்சித் திட்ட பணிகளை வாக்காளா்களிடம் கூறி ஆதரவு திரட்டினாா்.

உப்பளத்தில்...

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வியாழக்கிழமை மாலை தனது பிரசாரத்தை தொடங்கினாா்.

தொடா்ந்து அங்காளம்மன் கோயில் கிழக்குப் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளா்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தாா்.

காமராஜ் நகா் தொகுதியில்...

காமராஜ் நகா் தொகுதிக்குள்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்து

அப் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா்

Story image
Story image
Story image