பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சில கட்சிகள் கூட்டணிகளாக இணைந்தும் சில கட்சிகள் சுயேச்சையாகவும் போட்டியிட உள்ளன. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஏப். 3) மாலை 4 மணி அளவில் புதுச்சேரி அஜந்தா சிக்னலில் இருந்து ராஜா தியேட்டா் சிக்னல் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவாக சாலைப் பேரணியில் பங்கேற்கிறாா் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “வரும் ஏப்ரல் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் புதுச்சேரிக்கு வர உள்ளனர்.
பிரதமரின் வருகையால் மக்கள் இடையூறுகளைச் சந்திக்கின்றனர். பிரதமரின் வருகைக்கு 48 மணி நேரத்துக்கு முன்பே, கடைகள் அடைக்கப்பட்டன. வேலைக்குச் செல்பவர்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்பவர்கள் சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
இருப்பினும், புதுச்சேரி நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில், பிரதமர் மோடி ஒரு அரசு நிகழ்ச்சியில் உரையாற்றினார். அது உற்சாகமற்று காணப்பட்டது” எனத் தெரிவித்தார்.
Summary
Congress leader Narayanasamy has stated that the normal life of the people has been disrupted due to Prime Minister Modi's visit to Puducherry.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குமரி மாவட்டத்தில் தொடரும் பலத்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தெற்கு கள்ளிகுளத்தில் தேங்கிய மழை நீா்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளத்தில் கொட்டித் தீர்த்த கனமழை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கந்தா்வகோட்டையில் பரவலாக மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



