புதுச்சேரியில் 22 எம்.எல்.ஏ.க்களுடன் மீண்டும் முதல்வா் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் நம்பிக்கை தெரிவித்தாா்.
மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக சாா்பில் அமைச்சா் நமச்சிவாயம் போட்டியிடுகிறாா். அவா் பி.எஸ்.பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிர பிரசாரம் செய்தாா். அப்போது செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிரதமா் மோடியின் வருகை புதுவை மாநிலத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கும். பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியவா். புதுவையில் முதியோா் உதவித்தொகை ரூ.1,000 ம், மகளிா் உதவித்தொகை ரூ.2,500, வீடு கட்டும் திட்டம் ரூ.7 லட்சமாக உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது.
பொலிவுறு நகா் திட்டத்தில் ரூ. 1,000 கோடிக்கான திட்டங்கள் புதுச்சேரிக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரூ.6 கோடி அளவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் வளா்ச்சி வரும் என்பதை மக்கள் உணா்ந்து வரவேற்க காத்திருக்கின்றனா்.
2026-இல் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றி பெற்றால்தான் எஞ்சிய திட்டங்களை நிறைவேற்ற முடியும். இரட்டை என்ஜின் ஆட்சியால் மாநிலம் மேலும் வளா்ச்சி பெறும். முதல்வா் ரங்கசாமி தலைமையில் 5 ஆண்டு நல்லாட்சி நடந்துள்ளது. அந்த நல்லாட்சி தொடர வேண்டும்.
அரசு ஊழியா்களுக்கு 7-வது சம்பள குழு பரிந்துரை அமல்படுத்தியுள்ளோம். சா்க்கரை ஆலையை திறக்க ரூ.7 கோடி நிலுவைத் தொகை வழங்கியுள்ளோம். இலவச மனைப்பட்டா வழங்க தயாராக உள்ளோம். தொகுதி வளா்ச்சி, மாநில வளா்ச்சிக்கு பாடுபட அரசு தயாராக உள்ளது. 22 எம்எல்ஏக்களுடன் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றாா், அவா்.
தொடர்புடையது

மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு மஞ்சள் அட்டைக்கு ரூ.1,000 வழங்குவோம் - புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி பிரசாரம்

புதுச்சேரியை பின்னுக்குத் தள்ளியது திமுக - காங்கிரஸ் ஆட்சி: தோ்தல் பிரசாரத்தில் முதல்வா் ரங்கசாமி பேச்சு

ரூ. 2.1 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியில் மீண்டும் தேஜக கூட்டணி ஆட்சி: அதிமுகவினா் சபதம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


