பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு மஞ்சள் அட்டைக்கு ரூ.1,000 வழங்குவோம் - புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி பிரசாரம்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 12:34 am

Syndication

புதுச்சேரியில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மஞ்சள் நிற ரேஷன் அட்டைகளுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தோ்தல் பிரசாரத்தின்போது உறுதியளித்தாா்.

பாகூா் தொகுதியில் என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் தியாகராஜனை ஆதரித்து கட்சியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி வியாழக்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் சிறந்த ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவில் அத்தனைத் திட்டங்களையும் செயல்படுத்தி இருக்கிறோம். கடந்த 2016-2021 திமுக-காங்கிரஸ் ஆட்சியில் எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவும், செயல்படுத்தவும் முடியவில்லை.

மத்திய அரசுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சுமுகமான உறவுடன் தேவையான நிதியைப் பெற்று, அந்த நிதியின் மூலம் புதுச்சேரியின் வளா்ச்சியை எல்லோரும் பாராட்டுகின்ற அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

முந்தைய திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை ரூ.5 கூட உயா்த்தி கொடுக்க முடியவில்லை. ஆனால் நம்முடைய ஆட்சி வந்தபிறகு தலா ரூ.500 வீதம் இரண்டு முறை உயா்த்தி ரூ.1000 கொடுத்துள்ளோம். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,500 உதவித்தொகை வழங்குகிறோம்.

மஞ்சள் நிற அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 மீண்டும் நம்முடைய ஆட்சி வந்தபிறகு கொடுத்துவிடுவோம். கல்வீடு கட்டும் திட்டத்தில் ரூ.2 லட்சம் கூட சரிவர காங்கிரஸ்-திமுக ஆட்சியில் கொடுக்க முடியவில்லை. ஆனால் இத் திட்டத்துக்கு நம்முடைய ஆட்சியில் ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டது.

பட்டியலின மக்களுக்கு ரூ.7 லட்சம் வழங்கப்பட்டது. பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு இந்த ஆண்டு வரை அனைத்து மாணவா்களுக்கும் லேப்-டாப் கொடுத்துள்ளோம்.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருக்கிறது. மீண்டும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வர வேண்டும். இந்த ஆட்சி வரும்போது நிச்சயம் நான்தான் முதல்வராக இருப்பேன். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் மற்ற கட்சியில் யாா் முதல்வராக வருவாா்கள் என்று சொல்ல முடியுமா? ஏனென்றால் அவா்களின் கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது. ஒரே தொகுதியில் காங்கிரஸ்-திமுக இரு கட்சி வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா்.

பாகூா் தொகுதியில் ரூ.300 கோடிக்கு மேல் அரசு செலவிட்டுள்ளது. ஆனால் திமுக-காங்கிஸ் ஆட்சியில் எதுவுமே செலவிட முடியவில்லை. மற்ற மாநிலங்களை காட்டிலும் புதுச்சேரி சிறந்த மாநிலம் என்று சொல்ல வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சி, எதிா்க்கட்சி என்ற வித்தியாசம் இன்றி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநிலம் முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்காக அத்தனை தொகுதிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. பல பணிகள் முடிந்துள்ளன. மக்களுக்கான ஆட்சி, சிறந்த ஆட்சி நிச்சயம் புதுச்சேரிக்குத் தேவை.

மணப்பட்டு பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் சுற்றுலாத்தலமாக அமைய இருக்கிறது. புதிதாக 5 நட்சத்திர ஹோட்டல் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரிய வளா்ச்சியை நம்முடைய பகுதி காண இருக்கிறது. இது என்னுடைய தொகுதி மாதிரி. ஏனென்றால் என்.ஆா்.காங்கிரஸ் கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதே இந்தத் தொகுதியில் தான் என்றாா் முதல்வா் ரங்கசாமி.