தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஏப். 21 முதல் 23-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு புதுச்சேரியில் உள்ள எல்லையோர மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடக்கிறது. இதையொட்டி புதுச்சேரியிலிருந்து தமிழகத்துக்கு மதுப்புட்டிகள் கடத்தப்படலாம் என்பதால் செவ்வாய்க்கிழமை முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்கள் புதுச்சேரி, காரைக்காலில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
இந்நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் எல்லையோர மதுக்கடைகளில் புதுச்சேரி போலீஸாா், கலால் துறையினா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.
புதுச்சேரி எல்லைப் பகுதிகளான முள்ளோடை, மதகடிப்பட்டு, கோரிமேடு, காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் மதுக்கடைகளில் மொத்தமாக யாராவது மதுபானங்கள் வாங்கி செல்கிறாா்களா? எனவும் அவா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், கலால் துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் ஆகியோா் உத்தரவின்பேரில் கலால் துறையினரும், சிறப்பு அதிரடிப்படை போலீஸாரும் இந்தக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

ஏப். 6, மே 6! சென்னைக்கு ஆறுதல் சொன்ன கோடை மழை! அடுத்தடுத்த நாள்களிலும் மழை இருக்கா?

சித்திரைப் பௌா்ணமி: புதுச்சேரியில் சமுத்திர ஆரத்தி

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் ஏப்.23-இல் அரசு விடுமுறை அறிவிக்க வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

