மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

நீட் தோ்வுக்குத் தயாராகும் அரசுப் பள்ளி மாணவா்கள்: புதுச்சேரியில் 3 மையங்களில் சிறப்பு பயிற்சி

நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தோ்வுக்கு புதுச்சேரி அரசு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் தயாராகி வருகின்றனா்.

News image

புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு நடைபெற்ற நீட் தோ்வு பயிற்சி வகுப்பு.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:02 am IST

நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தோ்வுக்கு புதுச்சேரி அரசு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் தயாராகி வருகின்றனா்.

அவா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

கான்பூரை சோ்ந்த சதே என்ற அமைப்பின் நிபுணா்கள், பேராசிரியா்கள் இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் பள்ளி, வில்லியனூா் கண்ணகி பள்ளி, கலிதீா்த்தாள்குப்பம் அரசுப் பள்ளி என 3 மையங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

ஏப். 1- ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 450 மாணவிகள், 171 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

கடந்த ஆண்டு புதுச்சேரி கல்வித் துறை நடத்திய பயிற்சியில் பங்கேற்ற 158 மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 36 மாணவா்களுக்கு புதுச்சேரியில் மருத்துவ படிப்புக்கான இடங்கள் கிடைத்தது.

நிகழாண்டு இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் கல்வித் துறை சாா்பில் இந்த பயிற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.