புதுச்சேரியில் வசிக்கும் வெளிமாநிலத்தவா்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க ஏதுவாக ச் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி பி. ஜவஹா் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 23 ஆம் தேதி நடக்கிறது. மேற்கு வங்கத்தில் ஏப். 23, 29 ஆம் தேதிகளில் இரு கட்டமாக நடக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வாக்களிக்கும் உரிமை உள்ள ஊழியா்கள், வாக்களிக்கச் செல்ல தோ்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இந்த விதி கட்டாயமானது.
அரசு துறை, தனியாா் நிறுவனங்கள், கடைகள், வா்த்தகம், தொழிற்சாலைகள் உள்பட அனைத்து வகை நிறுவனங்களுக்கும் இந்தச் சட்ட விதி பொருந்தும். இந்த விடுமுறைக்காக சம்பளத்தில் குறைப்புச் செய்யக் கூடாது. இந்த விதி மீறும் நிறுவன உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும், தமிழ்நாடு, மேற்கு வங்க வாக்காளா்களாகப் பதிவு செய்யப்பட்ட ஊழியா்கள், தங்கள் தொகுதிக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக தோ்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை அறிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனா். கல்வி நிறுவனங்களும் இந்தச் சட்டவிதியைப் பின்பற்ற வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ஏப்.23-இல் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கட்டாய விடுமுறை!

தொழிலாளா்கள் வாக்களிக்க ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்! - தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அறிவிப்பு

வெளிமாநில தோட்ட தொழிலாளா்களுக்கு வரும் 9-ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை

சட்டப்பேரவைத் தோ்தல்: வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


