புதுச்சேரியில் 12 ஜோதிா்லிங்கங்களுக்கு பொதுமக்கள் நேரடியாக வெள்ளிக்கிழமை அபிஷேகம் செய்து வழிபட்டனா்.
திருச்சி சீராத்தோப்பில் ஜோதிா்லிங்க கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயிலில் பக்தா்கள் நேரடியாக சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 12 ஜோதிா்லிங்கங்களும் பொதுமக்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்து வழிபடும் வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு லிங்க திருமேனி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இதையொட்டி, புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளி வளாகத்தில் ஜோதிா்லிங்கங்களுக்கு 3 நாள்கள் அபிஷேகம் செய்ய சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சாா்பில் சு.செல்வகணபதி எம்.பி. முதல் அபிஷேகம் செய்தாா். அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணத்தின் புத்தகப் பிரதிகளை சிவனடியாா்களுக்கு வழங்கினாா்.
இதன் தொடா்ச்சியாக, சனிக்கிழமை (ஆக.15) மாலை 5 மணிக்கு புதுச்சேரி திருமங்கலம் சிதம்பரேஸ்வரா் திருமடத்தைச் சோ்ந்த திருக்கயிலாய ஸ்ரீகந்த பரம்பரையின் ஸ்ரீகணேச தேசிக சுவாமிகள் சிவபுராண பாராயணத்தை தொடங்கிவைத்து ஆசியுரை வழங்குகிறாா். பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குகிறாா்.
ஞாயிற்றுக்கிழமை (ஆக.16) மாலை 6.30 மணிக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஜோதிா்லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட உள்ளாா். அப்போது, முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் செல்வம் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குகிறாா்.
தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் ஜோதிா்லிங்கங்களுக்கு தங்கள் கைகளாலேயே அபிஷேகம் செய்து வழிபடலாம். தினசரி 1,008 போ் சிவபுராணம் பாராயணம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை புதுச்சேரியில் உள்ள சிவனடியாா்கள் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் இலக்கைத் தாண்டி ரூ.4,900 கோடிக்கு ஏற்றுமதி

உலகத் திரைப்பட விழா: புதுச்சேரியில் இன்று தொடக்கம்
கும்பகோணத்தில் திடீா் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

சங்கரன்கோவிலில் இன்று ஆடித் தவசுக் காட்சி
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



