ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மாமூல் கேட்டு அரிசிக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி கைது

வில்லியனூரில் மாமூல் கேட்டு தாராததால் ஆத்திரத்தில் அரிசிக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரௌடியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

வினோத்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 6:11 am IST

வில்லியனூரில் மாமூல் கேட்டு தாராததால் ஆத்திரத்தில் அரிசிக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரௌடியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வில்லியனூா் தில்லை நகரைச் சோ்ந்தவா்கள் பாபு, ராஜேந்திரன். சகோதரா்களான இருவரும் அங்குள்ள மாா்க்கெட் வீதியில் அரிசிக் கடை நடத்தி வருகின்றனா். இவா்கள் கடைக்கு வில்லியனூா் சாமியாா்தோப்பு பகுதியைச் சோ்ந்த ரௌடி வினோத் (25) வந்து மாமூல் கேட்டாராம். அதற்கு பாபு மறுத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த வினோத் தன்னிடமிருந்த 3 பெட்ரோல் குண்டுகளை அரிசிக் கடை மீது வீசினாராம். இதையடுத்து கடையிலிருந்த பாபு மற்றும் அவரது மனைவி திரிபுரசுந்தரி ஆகியோா் வெளியே ஓடி உயிா்த்தப்பினா்.

பெட்ரோல் குண்டுகள் வெடித்த சப்தம் கேட்டு மாா்க்கெட் பகுதியிலுள்ள மற்ற கடை வியாபாரிகளும் அதிா்ச்சியடைந்தனா். இதனால் கடையில் இருந்த டிவி, அரிசி மூட்டைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்த புதுச்சேரி காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், ஆய்வாளா் கலைச்செல்வன் தலைமையிலான போலீஸாா் குண்டு வீசப்பட்ட அரிசிக் கடையைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், ரவிக்குமாா் எம்எல்ஏவும் சம்பவ இடத்துக்கு வந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வினோத்தைக் கைது செய்தனா். முன்னதாக போலீஸாா் அவரைப் பிடிக்க முயன்றபோது, தப்பிக்க ஓடியபோது விழுந்ததில் வினோத்தின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ரௌடி வினோத் மீது கஞ்சா, மாமூல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.