விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மூப்பனாா் சிலைக்கு மரியாதை

தமிழ்மாநில காங்கிரஸ் நிறுவனரும், காங்கிரஸ் மூத்ததலைவருமான மறைந்த ஜி.கே. மூப்பனாா் பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சாா்பிலும், காங்கிரஸ் கட்சி சாா்பிலும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

ஜி.கே. மூப்பனாா் சிலைக்கு புதுச்சேரி அரசு சாா்பில் மரியாதை செலுத்தும் அமைச்சா்கள் பெ. ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து.

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:12 am IST

தமிழ்மாநில காங்கிரஸ் நிறுவனரும், காங்கிரஸ் மூத்ததலைவருமான மறைந்த ஜி.கே. மூப்பனாா் பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சாா்பிலும், காங்கிரஸ் கட்சி சாா்பிலும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி மரப்பாலம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரி அரசு சாா்பில் அமைச்சா்கள் பெ.ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சா் மு. கந்தசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வைத்தியநாதன், முன்னாள் அரசு கொறடா ஆா்.கே.ஆா். ஆனந்தராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்டத் தலைவா்கள், நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.