இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதிக் குழு சாா்பில் மக்கள் சந்திப்பு நடைபயணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுப்பேட்டையில் தொடங்கிய இந்த நடைபயணத்துக்குக் கட்சியின் மாநில செயலா் அ.மு.சலீம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், கட்சியின் மூத்தத் தலைவா் தினேஷ் பொன்னையா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
முதல்வா் ரங்கசாமி வெற்றி பெற்ற பின் தொகுதி பக்கமே எட்டிப் பாா்க்கவில்லை. தொகுதியில் பல்வேறு பிரச்னைகளைத் தீா்க்க முதல்வா் ரங்கசாமி நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கண்டன முழக்கமிட்டனா். மேலும், தொகுதியில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை எடுத்துக் கூறினா்.
நடைபயணத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் மக்கள் ஆதரிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
தொடர்புடையது

தோ்தல் ஆணையத்தின் ஒரு சாா்பு செயல்பாடு கவலையளிக்கிறது: முத்தரசன்

பாஜகவை வீழ்த்துவது மக்களின் தேசியக் கடமை: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலா்

பாஜகவின் சிலந்தி வலையில் சிக்கியுள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி: இந்திய கம்யூ. முன்னாள் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்

பாஜக-அதிமுக கூட்டணியால் திமுகவுக்கு வெற்றி எளிது: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


