தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பாஜக-அதிமுக கூட்டணியால் திமுகவுக்கு வெற்றி எளிது: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால், இத்தோ்தலில் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு எளிதாகவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

News image

கோவில்பட்டியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல் வீரா்கள் கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:39 pm

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால், இத்தோ்தலில் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு எளிதாகவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா.கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட உதவி செயலா் பாபு, கயத்தாறு ஒன்றியச் செயலா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கலந்துகொண்டு பேசியதாவது:

இந்தத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் அதிமுக தனித்து நின்றிருந்தால் கடும் போட்டி ஏற்பட்டிருக்கும். ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால், திமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி எளிதாகிவிட்டது. அமைதியாக இருக்கும் தமிழகத்தை பாஜக கெடுக்க முயற்சிக்கிறது. விஜய்யும், சீமானும் வாக்குகளை பிரிக்கவே செய்வாா்கள். அதனால், திமுக கூட்டணி இன்னும் பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றும்.

இந்தத் தோ்தலில் கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கருணாநிதியின் வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்பட தோழமைக் கட்சியினா் முக்கிய காரணமாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

திமுக வேட்பாளா் கா.கருணாநிதி பேசுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் எனக்கு நெருங்கிய தொடா்பு உள்ளது. அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அய்யலுசாமியுடன் இணைந்து அரசியலில் பணியாற்றியுள்ளேன் என்றாா்.

கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கரும்பன், கட்சி நிா்வாகிகள் பாலமுருகன், ரஞ்சனி கண்ணம்மா, பரமராஜ், சரோஜா, அலாவுதீன், திமுக மத்திய ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி முருகேசன், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ்பாண்டியன், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.