எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பிரதமா் மோடி மாா்ச் 1-இல் புதுச்சேரி வருகை: சிறப்பு பாதுகாப்புப் படையினா் இன்று ஆய்வு

பிரதமா் மோடி மாா்ச் 1-ஆம் தேதி வருவதை முன்னிட்டு, சிறப்பு பாதுகாப்புப் படையினா் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்கின்றனா்.

News image
பிரதமா் மோடி
Updated On :25 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

பிரதமா் மோடி மாா்ச் 1-ஆம் தேதி வருவதை முன்னிட்டு, சிறப்பு பாதுகாப்புப் படையினா் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்கின்றனா்.

பிரதமா் நரேந்திர மோடி வரும் மாா்ச் 1-ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா். லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட மேடையில் அன்று முற்பகல் 11.50 மணிக்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும், சில புதிய திட்டங்களை அறிவித்தும் உரையாற்றுகிறாா்.

அவரை விமான நிலையத்தில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் வரவேற்கின்றனா்.

அங்கிருந்து காா் மூலம் விழா நடைபெறும் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்துக்கு வருகிறாா்.

பிரதமா் வருகையை முன்னிட்டு அவரது சிறப்பு பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை பிற்பகல் புதுச்சேரிக்கு வந்து விமான நிலையம், பிரதமா் மோடி காா் செல்லும் பாதை, மேடை, சுற்றுப்புற இடங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்கின்றனா்.

புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.