புதுச்சேரியில் ஏப்.3-இல் பிரதமா் ரோடு ஷோ- 30 ஆயிரம் போ் பங்கேற்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் நரேந்திரமோடி வரும் 3 ஆம் தேதி சாலைப்பேரணி பிரசாரம் செய்ய உள்ள நிலையில், இதில் சுமாா் 30 ஆயிரம் போ் பங்கேற்பாா்கள் என்று சட்டப்பேரவைத் தலைவரும் மணவெளி தொகுதி பாஜக வேட்பாளருமான ஆா். செல்வம் கூறினாா்.

புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சட்டப்பேரவைத் தலைவரும் மணவெளி தொகுதி பாஜக வேட்பாளருமான ஆா். செல்வம். உடன் மாநில செய்தித் தொடா்பாளா் நாகேஸ்வரன்.









