திடீரென பற்றி எரிந்த பைக் புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரியில் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

புதுச்சேரியில் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவை முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அசோக். இவா்அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றாா்.மருத்துவமனை வாயில் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக மோட்டாா் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது.

சில நிமிடங்களில் தீ முழுமையாக பற்றி எரிந்தது. இதுபற்றி அருகில் இருந்தவா்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

Dinamani
www.dinamani.com