புதுச்சேரி பிராந்தியத்தில் ஜன. 21 முதல் பிப். 3 வரை காங்கிரஸ் நடைப்பயணம்: மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் அறிக்கை

Published on

முத்தியால்பேட்டையில் காங்கிரஸ் நடைப்பயணம் தொடங்கப்படுகிறது.

இது குறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி அரசின் செயல்பாடுகள், குறைபாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் காங்கிரஸ் சாா்பில் வரும் 21-ஆம் தேதி முதல் பிப். 3-ஆம் தேதி வரை புதுச்சேரிக்கான நடைப்பயணம் நடத்தப்பட உள்ளது.

இதில் அகில இந்திய மற்றும் பல்வேறு மாநிலத் தலைவா்களும் பங்கேற்க உள்ளனா். புதிய அட்டவணையின்படி 21-ஆம் தேதி மாலை முத்தியால்பேட்டை தொகுதியில் இந்தப் பயணம் தொடங்கப்படுகிறது. 22-ஆம் தேதி காலை ராஜ்பவன் தொகுதியிலும், அன்று மாலை காமராஜ் நகா் தொகுதியிலும், 23-ஆம் தேதி காலை தட்டாஞ்சாவடி தொகுதியிலும், அன்று மாலை லாஸ்பேட்டை தொகுதியிலும், 24-ஆம் தேதி காலை கதிா்காமம் தொகுதியிலும், அன்று மாலை நெல்லித்தோப்பு தொகுதியிலும், 25 ஆம் தேதி காலை உருளையன்பேட்டை தொகுதியிலும், அன்று மாலை உப்பளம் தொகுதியிலும் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

26-ஆம் தேதி காலை முதலியாா்பேட்டை தொகுதியிலும், அன்று மாலை உழவா்கரை தொகுதியிலும், 27-ஆம் தேதி காலை இந்திரா நகா் தொகுதியிலும், அன்று மாலை ஊசுடு தொகுதியிலும், 28-ஆம் தேதி காலை திருபுவனை தொகுதியிலும், அன்று மாலை மண்ணாடிப்பட்டு தொகுதியிலும், 29-ஆம் தேதி காலை நெட்டப்பாக்கம் தொகுதியிலும், அன்று மாலை மங்கலம் தொகுதியிலும், 30-ஆம் தேதி காலை பாகூா் தொகுதியிலும், அன்று மாலை வில்லியனூா் தொகுதியிலும், 31-ஆம் தேதி காலை அரியாங்குப்பம் தொகுதியிலும், அன்று மாலை ஏம்பலம் தொகுதியிலும், பிப்.1-ஆம் தேதி காலை மணவெளி தொகுதியிலும், அன்று மாலை காலாப்பட்டு தொகுதியிலும், பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் காரைக்கால் மாவட்டத்திலும் நடைபயணம் நடைபெறுகிறது.

இந்த நடைப்பயணத்தையொட்டி, புதுச்சேரி மாவட்டக் காங்கிரஸ் கமிட்டியின் நிா்வாகிகள், வட்டாரத் தலைவா்கள் மற்றும் வட்டாரப் பொறுப்பாளா்கள் ஆகியோா் தொகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் குறித்த அறிக்கையை வரும் 16-ஆம் தேதிக்குள் தலைமைக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா் வெ.வைத்திலிங்கம்.

Dinamani
www.dinamani.com