

விபி ஜி ராம் ஜி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் 10 கி.மீ. தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொள்ள கர்நாடக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும், வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்டத்துக்கு (விபி ஜி ராம் ஜி) எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விபி ஜி ராம் ஜி-க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கர்நாடகத்தில் காங்கிரஸார் நடைப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்காக, ஜன. 26 முதல் பிப். 2 வரையில் ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் 5 முதல் 10 கி.மீ. தொலைவுக்கு காங்கிரஸார் நடைப்பயணம் மேற்கொள்வர்" என்று தெரிவித்தார்.
சமீபத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, "மகாத்மா காந்தி முதல்முறையாக கோட்சே-வால் கொல்லப்பட்டார். இரண்டாவது முறையாக, மத்திய அரசால் காந்தி கொல்லப்பட்டிருக்கிறார். அவர்களுக்கு இந்தளவு பழிவாங்கல் இருக்கக் கூடாது" என்று மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டி விமர்சித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.