

விஜய்யின் ஜன நாயகன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக இங்கு ஜனநாயகம் இல்லை என்று நடிகர் சிபி சத்யராஜ் விமர்சித்துள்ளார்.
நடிகர் சிபி சத்யராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று ஜனநாயகனும் இல்லை ! இங்கு ஜனநாயகமும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு மத்திய தணிக்கைச் சான்றிதழ் வாரியம் தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்தது மட்டுமின்றி, இதுதொடர்பான வழக்கில் மேல் முறையீடும் செய்துள்ளது.
இதனால், ஜன. 9-ல் வெளியாகவிருந்த ஜன நாயகன் ஒத்திவைக்கப்பட்டது. ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் திமுக அரசு மீது பாஜகவும், மத்திய பாஜக அரசு மீது திமுக கூட்டணிக் கட்சிகளும் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கும் தணிக்கைச் சான்றிதழ் தாமதிக்கப்பட்ட நிலையில், கடைசித் தருணத்தில் வழங்கப்பட்டு, இன்று (ஜன. 10) திரையரங்குகளில் வெளியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.