விபி ஜி ராம் ஜி-க்கு எதிர்ப்பு! காங்கிரஸ் இன்று உண்ணாவிரதப் போராட்டம்!

விபி ஜி ராம் ஜி சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸார் இன்று உண்ணாவிரதப் போராட்டம்
congress
காங்கிரஸ் போராட்டம்கோப்புப் படம்
Updated on
1 min read

விபி ஜி ராம் ஜி சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸார் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும், வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்டத்துக்கு (விபி ஜி ராம் ஜி) எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விபி ஜி ராம் ஜி-க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, காங்கிரஸார் இன்று (ஜன. 11) நாடு முழுவதும் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மேலும், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்காக, ஜன. 26 முதல் பிப். 2 வரையில் ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் 5 முதல் 10 கி.மீ. தொலைவுக்கு காங்கிரஸார் நடைப்பயணம் மேற்கொள்வர்" என்றும் அறிவித்திருந்தார்.

congress
சொல்லப் போனால்... திரைப்படங்களும் வெட்டுக் கத்திகளும்!
Summary

Congress launches MGNREGA Bachao Sangram, to hold hunger strike in state

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com