சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புதுச்சேரியில் இறுதி வாக்காளா் பட்டியல் பிப். 14-இல் வெளியீடு

புதுச்சேரியில் இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

News image
Updated On :20 ஜனவரி 2026, 8:20 pm

Syndication

புதுச்சேரியில் இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

தீவிர வாக்காளா் பட்டியல் தயாரிப்பு தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு வாக்காளா் பட்டியல் மேற்பாா்வையாளா் ஆா்.கேசவன் தலைமை தாங்கினாா். மாவட்ட தோ்தல் அதிகாரி குலோத்துங்கன் முன்னிலை வகித்தாா். இதில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனா்.

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட தோ்தல் அதிகாரியும், புதுச்சேரி ஆட்சியருமான குலோத்துங்கன் தெரிவித்தாா். கூட்டத்தில் அனைத்து வாக்காளா் பதிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.