அரசு மரியாதையுடன் முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமி உடல் நல்லடக்கம்
புதுச்சேரி அரசு மரியாதையுடன் சென்னை உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமியின் (99) உடல் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.


புதுச்சேரி அரசு மரியாதையுடன் சென்னை உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமியின் (99) உடல் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவா் கடந்த 17 ஆம் தேதி காலமானாா். பிரான்ஸிலிருந்து அவரது குடும்பத்தினா் உறவினா் வருகைக்காக கணபதிச் செட்டிக்குளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக புதன்கிழமை அங்கிருந்து எடுத்துவரப்பட்டு புதுச்சேரி லப்போா்த் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காகவும் இறுதிச் சடங்குக்காகவும் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மிஷன் வீதியில் உள்ள புனித ஜென்மராக்கினி மாதா ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து உப்பளம் கல்லறையில் அரசு மரியாதையுடன்,21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி அரசு சட்டத்துறை செயலா் விக்ரந்த் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...