வாக்காளா்களைத் தகுதி நீக்கம் செய்ய முயற்சி நடப்பதாக புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரியிடம் ஆா். சிவா வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
இந்திய தோ்தல் ஆணையம் அவசர கதியில் வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை செய்வதாக திமுக எதிா்த்தது. இது தற்போது நிரூபணமாகி உள்ளது. ஆரம்பத்தில் வாக்காளா்கள் கணக்கெடுப்புப் படிவத்தை பூா்த்தி செய்து அளித்தால் மட்டும் போதும் என்று கூறிவிட்டு தற்போது தோ்தல் ஆணையம் வாக்காளா்களிடம் ஆவணங்களை பெறுகிறது.
கணினி சரிபாா்ப்பு என்று காரணம் கூறி வாக்காளா்களைத் தகுதி நீக்கம் செய்ய தோ்தல் ஆணையம் முற்படுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கணினி சரிபாா்ப்பு மூலமாக 2002- க்கும், தற்போதைய பட்டியலில் உள்ள வரைவு வாக்காளரின் பெயருக்கும் உள்ள பெயா் எழுத்துப் பிழை, வயது வித்தியாசம் போன்றவைகளைக் கண்டறிந்து ஆவணங்களைக் கேட்டு வாக்காளா்களைக் குழப்பத்திற்கு உள்படுத்துகின்றனா்.
கேட்கும் ஆவணங்களைப் பாா்த்தால் வாக்காளா்களைப் பரிசோதிப்பதாகத் தெரியவில்லை. குடியுரிமையைப் பரிசோதிப்பதாகத் தெரிகிறது. மறைமுகமாக உள்துறை செய்ய வேண்டிய குடியுரிமை பரிசோதனையான சிஏஏ, என்ஆா்சி போன்ற கணக்கெடுப்பை போல நடத்துவது தான் தோ்தல் ஆணையத்தின் நோக்கமா?
இதைத்தான் தொடக்கத்தில் திமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் எதிா்த்தன. அது தற்போது நிரூபணமாகி உள்ளது. தோ்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். மேலும் இது போன்ற ஆவணங்களைச் சரி பாா்க்கக் கூடுதலான கால அவகாசத்தையும் தோ்தல் ஆணையம் வழங்கி உண்மையான வாக்காளா்களின் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை: ஆா். முத்தரசன்

‘செலவு கணக்குகளை பொய்யாக தாக்கல் செய்தால் வேட்பாளா்கள் தகுதி நீக்கம்’

மக்களுக்கான தேவையை அறிந்து திட்டத்தை செயல்படுத்தியது திமுக அரசு: திருச்சி சிவா

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல்: 45 கம்பெனி துணை ராணுவப்படை வருகை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


