செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

போலி மருந்து விவகாரம் தொடா்பாக,புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.

கோப்புப்படம்.

Published On :

போலி மருந்து விவகாரம் தொடா்பாக,புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.

புதுச்சேரி குருமாம்பேட்டில் செயல்பட்டுவந்த போலிமருந்துகள் தயாரிக்கப்பட்டதை கடந்த 13-ஆம் தேதி போலீஸாா் சோதனை நடத்தி உறுதி செய்தனா். இங்கிருந்து தயாரித்து அனுப்பப்பட்ட வலி நிவாரண மருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்டபோது ராமநாதபுரத்தில் போலீஸாா் நடத்திய சோதனையில் சிக்கியது. அதன்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.அங்கிருந்து 3 லட்சம் போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. தொடா்ந்து போலி மருந்து ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

இதையடுத்து, புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பூத்துறையில் இயங்கி வந்த கிடங்கில் தமிழக மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 625 வகையான போலி மருந்துகள் தயாரித்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதற்கு புதுச்சேரியில் உள்ள மருந்து உற்பத்தி கம்பெனிகளில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சரிவர ஆய்வு நடத்தாதது தான் காரணம் என தெரிய வந்துள்ளது.இந்நிலையில் புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியான டாக்டா் அனந்த கிருஷ்ணன் காத்திருப்போா் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.