கவிஞா் வாணிதாசன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை தலைவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சாா்பில் நடைபெற்ற, கவிஞரேறு செவாலியே வாணிதாசன் 112-வது பிறந்தநாள் விழாவையொட்டி பாரதிபூங்காவில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா் பெ. ராஜவேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் அழகு என்கிற அழகானந்தம், ரவிக்குமாா் , இ.மோகன்தாஸ் ஆகியோரும் மாலை அணிவித்தனா். மேலும், பாரதிதாசனின் பெயரன் கோ.பாரதி, மற்றும் கவிஞா் வாணிதாசனின் குடும்பத்தினரும் பங்கேற்றனா். இதுபோன்று பல்வேறு அமைப்பினரும் மரியாதை செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










