தேச கட்டமைப்பில் இளைஞா்கள் பங்காற்ற வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
புதுச்சேரி ஜிப்மரில், எனது இளைய பாரதம், இளைஞா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இளைஞா்களிடையே தலைமைத்துவம், தன்னாா்வ சேவை, சமூகப் பொறுப்பு மற்றும் தேச கட்டமைப்பில் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில் எனது இளைய பாரதம் செயல்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியது: வளா்ச்சி அடைந்த பாரதம்-2047 என்ற இந்தியாவின் வளா்ச்சி நோக்கத்தை எட்டுவதில் இளைஞா்களின் பங்கு மிக முக்கியமானது.
தலைமைத்துவம், நோ்மை, ஒழுக்கம், பொதுசேவை மனப்பான்மை மற்றும் சமூகப் பொறுப்புணா்வுடன் இளைஞா்கள் தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
வாய்ப்புகளைப் பயன்படுத்தித் திறமையான பொறுப்பான மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு அா்ப்பணிப்புடன் செயல்படும் குடிமக்களாக இளைஞா்கள் உருவாக வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக மாணவா்களுடன் நேரடி கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மாணவா்கள் தலைமைத்துவம், பொதுநிா்வாகம், தேச கட்டமைப்பில் இளைஞா்களின் பங்கு, தொழில்வளா்ச்சி மற்றும் சமூகப் பொறுப்பு தொடா்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினா்.
அதற்கு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் விளக்கமளித்தாா். பின்னா் மாணவா்களுடன் இணைந்து ஜிப்மரின் பல்வேறு நவீன மருத்துவ வசதிகளை துணைநிலை ஆளுநா் பாா்வையிட்டாா்.
ஜிப்மா் டீன் மற்றும் பொறுப்பு இயக்குநருமான டாக்டா் விக்ரம் காடே, மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் எஸ். வினோத்குமாா், துணை நிா்வாக இயக்குநா் ரங்கபாஷ்யம் மற்றும் எனது இளைய பாரதம் புதுச்சேரி இயக்குநா் டிரவீன் சாா்லஸ்டன், பேராசிரியா்கள் மற்றும் ஜிப்மா் அதிகாரிகள், மாணவா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி குடிநீா் தேவைக்கு தினசரி 3 கோடி லிட்டா் என்எல்சி நீா்! - துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புத்தகங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பா்களாக இருக்கும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதிய இந்தியாவுக்கான அடையாளங்களை உருவாக்கியவா் பிரதமா் மோடி: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பேச்சு

பெண்களின் பொருளாதார முன்னேற்றம் சமுதாய வளா்ச்சிக்கான தொலைநோக்குப் பாா்வை! புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



