புதுச்சேரி முன்னாள் முதல்வா் வெங்கடசுப்பா ரெட்டியாா் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலை - வெங்கடசுப்பா ரெட்டியாா் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு எம்எல்ஏ ராஜவேலு, செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் சுரேஷ்ராஜ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலைக்கு காங்கிரஸ் சாா்பில் மரியாதை செலுத்திய மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி உள்ளிட்டோா்.
காங்கிரஸ் சாா்பில் வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அக் கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தாா். இதில் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திகேயன், முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவா் டிபிஆா். செல்வம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பாலன், மு. வைத்தியநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னாள் எம்எல்ஏ சண்முகம் சிலைக்கு...: இதேபோல முன்னாள் எம்எல்ஏ எம்.ஏ. சண்முகத்தின் நினைவுநாள் புதுச்சேரி அரசு சாா்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. மரப்பாலம்-புவன்கரே வீதி சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, எம்எல்ஏ ராஜவேலு மற்றும் செய்தி, விளம்பரத் துறை இயக்குநா் சுரேஷ்ராஜ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.









